ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஒரு நகரில் அமைந்துள்ள ஒரு மசூதிக்கு கட்டுமான அனுமதி இல்லாத காரணத்தினால் அதை இடிப்பதற்கான உத்தரவினை இஸ்ரேலிய நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக பாலஸ்தீனிய ஊடகங்கள் உள்ளூர்வாசிகளை மேற்கொள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் இடிப்பு அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, காசாவில் உள்ள மானியம் மற்றும் மத விவகார அமைச்சகம் பாலஸ்தீனிய ஊடகங்களால் பரப்பப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன் இந்த நடவடிக்கைக்கு எதிராக இஸ்ரேலையும் எச்சரித்துள்ளது.

அது மாத்திரமின்றி ஜெருசலேமில் உள்ள முஸ்லிம் புனித தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க சர்வதேச சமூகம், அரபு லீக் மற்றும் இஸ்லாமிய மாநாட்டின் அமைப்பு ஆகியவற்றுக்கும் பாலிஸ்தீன் அழைப்பு விடுத்துள்ளது.

சில்வான் நகரில் உள்ள ககா பின் அம்ர் மசூதி உள்ள பகுதியில் உள்ள உத்தரவை சவால் செய்ய இஸ்ரேலிய அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு 21 நாட்கள் அவகாசம் அளித்தனர், 

இல்லையெனில் இந்த உத்தரவு மேற்கொள்ளப்படும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேபோன்ற இடிப்பு உத்தரவு 2015 இல் வெளியிடப்பட்டது, ஆனால் அது ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை.

2012 இல் நிர்மாணிக்கப்பட்ட இந்த இரண்டு மாடி மசூதியில் நூற்றுக்கணக்கான வழிபாட்டாளர்கள் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.