இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் முகக்கவசம் அணிய மறுப்பவர்களுக்கு தண்டனையாக கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய புதைகுழிகளை  தோண்டுவதற்கு இந்நாட்டு அரசினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Grave diggers wearing coronavirus face masks prepare for a funeral at Pondok Rangon Public Cemetery in east Jakarta

கிழக்கு ஜாவாவில்  உள்ள பாண்டோக் ரங்கோன் எனப்படும் பொது மையானத்தில்  இதுவரை எட்டு பேருக்கு இவ்வாறு தண்டனை விடுவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுபாடுகளை மீறியதற்காக 'கொரோனா தடுப்பு' என தெரிவித்து இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

Workers dig holes at a burial site for victims of the Covid-19 coronavirus in Jakarta on September 11

இவ்வாறு தண்டிக்கப்படுபவர்கள் ஒவ்வொரு கல்லறையையும் தோண்டுவதற்கு நியமிக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

As the number of residents exposed to more and more victims fell back, the number of burrows left for the bodies of Covid-19 patients at this burial site is only around 1,100 burrows

இதே வேளை, இந்தோனேசியாவில்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று 3,141 ஆக பதிவாகியதையடுத்து  மொத்தம் எண்ணிக்கை  221,523 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இங்கு 8,841பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.