பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எழுப்பிய ஆட்சேபனையை ஆராயுமாறு நாமல் அறிவுறுத்தல்

Published By: Vishnu

14 Sep, 2020 | 05:58 PM
image

இலங்கைக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடர் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) எழுப்பியுள்ள ஆட்சேபனை குறித்து ஆராயுமாறு இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நமால் ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் திட்டமிடப்பட்டிருந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது கொவிட்-19 தொற்று நோயால் ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை ஒக்டோபர் 24 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

அதனால் இப் போட்டியில் விளையாடுவதற்காக செப்டெம்பர் 27 ஆம் திகதி பங்களாதேஷ் அணி இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எனினும் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரிக்கெட் குழுவினர் கொரோனா சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் இணைந்து கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்துடன் அதிகாரிகள் பிறப்பித்தனர்.

இதனால் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் பி.சி.பி. தலைவர் நஸ்முல் ஹசன் நிராகரித்துள்ளார்.

இந் நிலையில் கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பி.சி.பி எழுப்பிய ஆட்சேபனைகளை மறுபரிசீலனை செய்யவும் விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35