நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிக்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது.

சிலாபம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய ஆண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் செப்டெம்பர் 2 ஆம் திகதி பஹ்ரைனில் இருந்து நாட்டுக்கு வருகை தந்தவர் ஆவர்.

முதலில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்ட பின்னர் கடந்த 9 ஆம் திகதி சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த நபர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டிருந்தமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.