திருகோணமலையில் 580 மில்லிகிராம் ஹெரொயின் போதைப் பொருளுடன் ஒருவரை நேற்றிரவு (13.09.2020) கைது செய்துள்ளதாக திருகோணமலை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறிமாபுர, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் ஹெரொயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதோடு ஒரு மாதத்திற்கு முன்னர் ஆறு மாதம் சிறைதண்டனை அனுபவித்து விட்டு விடுதலையாகி சென்ற நிலையிலே 580 மில்லிகிராம்  ஹெரொயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக திருகோணமலை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.