ஹல்துமுல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்ட விரோதமாக புதையல் தோண்ட முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹல்துமுல்ல தமிழ் பாடசாலைக்கு அருகிலுள்ள தனியார் இடமொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை புதையல் தோண்ட முற்பட்ட போதே குறித்த சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹல்துமுல்ல, கொழும்பு  மற்றும் இங்கிரிய பகுதிகளைச் சேர்ந்த 20, 23, 36, 54 மற்றும் 62 வயதுடைய நபர்களே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

--