புலத்கொஹூபிட்டிய  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரக்காஹேன பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போர 12 ரக துப்பாக்கி மற்றும் போர 12 ரக தோட்டா 1 ஆகியவற்றுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீதாவக்கபுர குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஞாயிற்றுக்கிழமை முற்பகல் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரக்காஹேன பகுதியைச் சேர்ந்த 64 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.