அமெரிக்காவின் மேற்கு கடலோர மாகாணங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் இதுவரை  35 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஓரிகன் மாநிலத்தில் மட்டும் டஜன் கணக்கானவர்களை காணவில்லை. 

மேலும் 'எந்த ஒரு மோசமான சம்பவத்திற்கும்' இந்த மாகாணம் தயாராக வேண்டும் என அவசரநிலைப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஓரிகன், கலிபோர்னியா மற்றும் வொஷிங்டன் மாகாணங்களில், கடந்த மூன்று வாரங்களாக காட்டுத்தீப்பற்றி எரிகிறது. இதனால் பல இலட்ச ஏக்கர் நிலங்கள் அழிந்துவிட்டன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று  வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

உள்ளூர் தலைவர்கள் தீ விபத்துக்கு காலநிலை மாற்றத்தை குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் டொனால்ட் ட்ரம்ப் வன நிர்வாகத்தை குற்றம் சாட்டுகிறார்.

Photo credit ; AP