(நேர்கணல்:- ஆர்.ராம்)

“தாயார் சியாமளாவைப் போன்றே கமலாவும் தைரியமானவள், விடயங்களை ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதில் சிறந்தவள். எதற்கும் அஞ்சாதவள்”

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மூன்றாம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் துணை ஜனாதிபதி வேட்பாளராக, ஆசிய, ஆபிரிக்க பின்னணிகளையும் நெருங்கிய தொடர்புகளையும் கொண்டிருக்கும் கலிபோர்னியாவின் செனட்டர் சட்டத்தரணி. ‘கமலாதேவி’ என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா ஹரிஸை நியமித்திருக்கின்றார்.

அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதியுச்ச பதவியொன்றுக்கு பரம்பரை ரீதியான அமெரிக்க பூர்வீகமற்ற ஒருவர் முதற்தடவையாக நியமிக்கப்பட்டிருக்கின்றார். 

இந்த நியமனம், ஆசியர்களையும்,  குறிப்பாக இந்தியர்களையும், இலங்கை தமிழர்களையும் மகிழ்ச்சிக்குட்படுத்திய அதேநேரம், ஆபிரிக்க, அமெரிக்கர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் கமலா ஹரிஸின் வெற்றி தமது எதிர்கால நன்களுக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்திருக்கின்றது.

இந்தப்பின்னணியில் கமலா ஹரிஸின் இரத்த உறவுகள் இன்னமும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த உறவுகளில் மிகவும் முக்கியமான இருவர்களில் ஒருவர் அவருடைய சித்தியான சென்னை வி.எச்.எஸ் மருத்துவமனையில் வைத்தியராக பணியாற்றி வரும் சரளா கோபலன். மற்றையவர் ஊடகவியலாளர், அமெரிக்க-இந்திய சிந்தனைக்குழு அங்கத்தவர்ரூபவ் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுகள் கல்வி நிறுவனத்தில் ஆசியர், ஆய்வாளர் பேராசிரியர் என்று பல பரிமானங்களைக் கொண்டிருக்கும் கமலா ஹரிஸின் தாய் மாமனரான 80 வயதுடைய கோபாலன் பாலச்சந்திரன்.

இவர் புதுடெல்லியில் வசித்து வருகின்ற நிலையில் கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டமை முதல் அவருடான தனது ஊடாட்டங்கள் மற்றும் கருத்துப்பகிர்வுகள் தொடர்பாக வீரகேசரிக்கு தொலைபேசி ஊடாக விசேட செவ்வியொன்றை வழங்கினார். 

அந்த செவ்வியில் அவர் பகிர்ந்துகொண்டுள்ள முக்கிய பல விடயங்கள் வருமாறு,

“அன்று ஆகஸ்ட் 12 ஆம் திகதி வழமைபோன்றே காலை ஐந்து மணியளில் நித்திரையில் இருந்து எழுந்து எனது தொலைபேசியை பார்க்கின்றேன், ‘Congratulation Bala’ என்றொரு குறுஞ்செய்தி எனது தங்கை சரளாவிடத்திலிருந்து வந்திருந்தது. இந்த அதிகாலையில் எனக்கு எதற்கு வாழ்த்துகின்றார் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு அவரை தொடர்பு கொண்டேன்.

அப்போது, ‘கமலா துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டாள். எமது குடும்பத்தினை அதியுச்ச நிலைக்கு கொண்டு சென்று விட்டாள்’ என்று கூறினாள் எனது தங்கை.

அந்த தகவல் எனக்கு புளகாங்கீதத்தினை ஏற்படுத்தியது” என்று அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் பெயரிடப்பட்ட செய்தியை முதன் முதலில் கேட்டபோது தன்னுள் ஏற்பட்ட மகிழ்ச்சினை வெளிப்படுத்தினார் அவரது தாய் மாமனரான கோபாலன் பாலச்சந்திரன்.

“தங்கை சரளாவின் தொலைபேசி அழைப்பினை நிறைவுசெய்த அடுத்த நொடியே,‘கமலா நான் உன்னை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். சியாமளா உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுவார்.

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்’ என்ற செய்தியை கமலாவுக்கு அனுப்பினேன். வொஷிங்டனில் இருக்கும் எனது மகள் சாரதாவுக்கும் அந்த தகவலை அனுப்பினேன். அந்த நொடியிலிருந்து எனது தொலைபேசிக்கு அழைப்புக்கள் வர ஆரம்பித்தன. அவை அனைத்திற்கும் பதிலளிப்பதற்கே அதற்கடுத்து இரண்டு மூன்று நாட்கள் கழிந்திருந்தன என்று பெருமிதமாக கூறினார் அவர்.

கமலா ஹரிஸின் நியமனம் பற்றி கூறிய அவர், “அரசியலில் பிரவேசித்து சொற்காலத்திலேயே செனட்டராக தெரிவு செய்யப்பட்டார் கமலா. கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்களத்தில் அவரது பெயர் வர ஆரம்பித்தது. அப்போதே கமலா, அமெரிக்க அரசியலில் முக்கிய இடம் நோக்கி நகருவாள் என்றும் எண்ணியிருந்தேன்.

அத்தோடு அண்மைய காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கறுப்பின போராட்டங்கள் உள்ளிட்ட நெருக்கடியான நிலைமைகள் அதிகரித்திருக்கின்ற தருணத்தில் கமலா முக்கிய வகிபாகத்தினை கொள்வார் என்று நான் ஏற்;கனவே எண்ணியிருந்தேன்” என்கிறார்.

கமலா ஹரிஸின் தயாரும், தனது தங்கையுமான சியாமளாவுடனான ஊடாட்டம் தொடர்பிலான நினைவுகளை மீட்டிய பாலச்சந்திரன், “ எங்களுடைய அப்பா பி.வி.கோபாலன் அரச உத்தியோகம் பார்த்தார். அப்போது தங்கை சியாமளா எர்வின் கல்லூரியில் மனையியல் துறையில் கற்றார். அவர் இயல்பாகவே தனது பணிகளை சுயமாக முன்னெடுக்க கூடியவர். யாரிலும் தங்கியிருக்க விரும்பாதவர். அவர் கல்லூரி கற்கைகளின் போதே கலிபோர்னிய பல்கலைக்கழக புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பித்தார். அந்த சந்தர்ப்பத்தில் அப்பாவினால் கற்கைகளுக்கான முழுப் பணத்தையும் வழங்கமுடியாது. ஒருவருடத்திற்கே பணம் வழங்க முடியும் என்று கூறியபோது அதனை ஏற்றுக்கொண்டு அமெரிக்க தேசத்தில் சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராகி தனது 19 ஆவது வயதில் எம்மை விட்டு தனியாகப் சென்றுவிட்டார் என்று குறிப்பிட்டார்.

“சியாமளாவைப் பொறுத்தவரையில் அந்த கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்ததோடு தன்னம்பிக்கை, சமத்துவம், மனிதாபிமான பண்புகள் போன்றவற்றை உயர்ந்த தானத்தில் கொண்டிருந்தாள். அந்த பண்புகளை தனது பிள்ளைகளான கமலாவுக்கும் மயாவுக்கும் ஊட்டி வளர்க்க அவள் தவறவில்லை. தனியொருவராக கடினமான கட்டங்களைக் கடந்து தனது இரண்டு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுத்து சிறந்த சட்டத்தரணிகளாக மாற்றியுள்ளாள்” என்பது பெருமைக்குரியதே என்றும் அவர் கூறினார்.

அதுமட்டுமன்றி, “சியாமளா, ஜனநாயக போராட்டங்களிலும் சமூகச் செயற்பாடுகளிலும் அதிகமாக தன்னை ஈடுபடுத்தினாள். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கான குடியுரிமை போராட்டங்கள் உள்ளிட்ட விடயங்களில் அவளது கரிசனை அதிகமாக இருந்தது. சியாமளா போராட்டங்களில் பங்கேற்கும்போது இரண்டு வயதே நிரம்பிய கமலாவையும் பின்னர் மாயாவையும் தன்னுடன் கூட்டிச் செல்வதாக அடிக்கடி என்னிடத்தில் கூறுவாள்.

அதன் காரணத்தினாலோ என்னமோ கமலாவிடத்திலும் நீதிக்காக போராடுகின்ற, குரல் கொடுக்கின்ற மனநிலை இயல்பாகவே ஏற்பட்டிருக்கின்றது. பொதுப்பணிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் போக்கும் அதிகமாகவே உள்ளது. சட்டத்தரணியாக இருக்கும் கமலா, நிறுவன ரீதியாக செயற்படும் பாதையை தவிர்த்திருப்பது அவள் சமூகத்தின் மீது கொண்டிருக்கும் பிணைப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தவதாக இருக்கின்றது” என்று கமலாவும் தயைப்போல் சேய் என்பதை சுட்டிக்கூறிவிடுகின்றார் அவர்.

“எனது விடுமுறைக்காலத்தில் அமெரிக்கா செல்வதும் சியாமளாவின் விடுமுறைக்காலத்தில் அவள் தனது இரண்டு பிள்ளைகளுடன் இந்தியா வருவரும் இயல்பானது. மும்பையும் டெல்லியிலும் நான் தங்கியிருந்தபோது சியாமளா வந்திருக்கின்றாள். சென்னையில் உள்ள தங்கை சராளிவின் வீட்டிற்கும் அவர் செல்வதுண்டு. சியாமளாவும் குழந்தைகளும் இந்தியப் கலாசார, பண்பாடுகளை நன்கு அறிந்திருந்தார்கள். 2009ஆம் ஆண்டு சியமளா எம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

அதன் பின்னர் அவருடைய அஸ்தியைக் வங்ககடலில் கரைப்பதற்காக கமலா இந்தியாவுக்கு வந்திருந்தார். அதுவொரு உணர்ச்சிகரமான நிகழ்வாக இருந்துவிட்டது” என்று சற்றே தளுதளுத்த குரலில் மனநெகிழ்ச்சியை வெளிப்படுத்தனார் பாலசந்திரன்.

கணப்பொழுதில் அதிலிருந்து மீண்டவர், “கமலாவும் மாயாவும் சிறியவர்களாக இருக்கும்போது எனது மடியில் அமர்ந்திருந்து விளையாடுவார்கள். அதற்குப் பின்னராக காலங்களில் அவர்கள் இருவரையும் நான் கேலி செய்வது, நகைச்சுவையாக பேசுவது என்று மகிழ்வாக தருணங்களை களித்திருக்கின்றோம். இருவருக்குமே குடும்ப உறவுகள் மீதான பற்று மிகமிக அதிகமாகவே இருக்கும். மிகவும் அதிகமான கரிசனைகளை கொண்டிருப்பார்கள். நான் சென்ற தருணங்களில் எல்லாம் அவர்கள் என்மீது அதிக சிரத்தை எடுப்பார்கள்.

கமலாவும் மாயாவும் கல்வியில் கணிசமான அடைவுகளை தொடர்ச்சியாக பெற்றனர். பல விடயங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அவர்களுக்கு இருந்தது. சட்டத்துறையை இருவரும் தெரிவு செய்து அதனையும் சிறப்பாக பூர்த்தி செய்துள்ளனர்” என்பது என்றுமே சிப்பானதொரு விடயம் என்று குறிப்பிட்டார்.

“கமலாவைப் பொறுத்தவரையில் அவர் தனது தாயாiராப் போன்று மிகவும் தையிரிமானவள். எந்தவிடயங்களையும் ஆராய்ந்து பார்க்கும் திறமை கொண்டவள். தீர்மானங்களை சரியாக எடுக்கும் மனோ நிலையும் எடுத்த தீர்மானத்தில் உறுதியாக இருக்கும் போக்கும் அவளிடத்தில் காணப்படுகின்றது. 

ஆகவே அரசியலில் பிரவேசிப்பது என்று முடிவெடுத்தபோது பல விடயங்களை நிச்சயமாக ஆராய்ந்திருப்பாள். ஏற்படப்போகும் சவால்களையெல்லாம் கவனத்தில் கொண்டிருப்பாள். 

ஆகவே அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்களால் அவள் நிச்சயமாக தளவர்வடையப்போவதில்லை” என்ற நம்பிக்கை எனக்குள்ளது. “இந்த நாட்களில் கமலாவைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றார். அவற்றுக்கு முகங்கொடுக்கும் ஆற்றல் கமலாவிடத்தில் இருக்கின்றது.

சியாமளா அடிக்கடி கூறுவதைப் போன்றே ‘என்ன செய்வதென்று தெரியும். எப்படிச் செய்வதென்றும் தெரியும்’கமலாவும் கூறுவாள். நியாயத்திற்காக போராடும் அவள் எதற்கும் அஞ்சாதவளாகவும் இருந்து வருகின்றாள்” என்றும் அவர் கூறினார்.

“ஜனநாயகப் பண்புகளை அதியுச்சமாக கொண்டிருக்கும் அமெரிக்காவில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசியர்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்கள் அமெரிக்காவின் வெவ்வேறு துறைசார்ந்த விடயங்களில் அதியுச்ச பதவிகளை வகித்துள்ளார்கள். வகித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அரசியலில் இவர்கள் பிரவேசிப்பதில்லை.

காரணம், தாம் வெளிநாட்டு பூர்வீகத்தினைக் கொண்டிருப்பதால் தமக்கான அங்கீகாரம் கிடைக்காது என்ற மனநிலையினாலாகும். ஆனால் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா நியமிக்கப்பட்டதன் மூலம் தெற்காசியர்கள் அந்த மனநிலையிலிருந்து வெளிவருவதற்கு முன்னுதாரணமாகி விட்டாள். அத்துடன் பெண்களுக்கும் பாரிய மனோ திடத்தினை வழங்கிவிட்டாள்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், தமக்கு தேவையானவர்கள் வேறு நாடுகளின் பூர்வீகமாக இருக்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்வது கிடையாது. குறிப்பிட்ட நபரால் தமது நாட்டுக்கு என்ன நன்மை என்றே அவர்கள் கருதுவார்கள். ஏனைய நாடுகளுக்கு அதுவொரு சிறந்த முன்னுதாரணமே. மேலும் கமலாவின் நியமனம் அமெரிக்காவின் எதிர்கால அரசியலில் தெற்காசியர்கள் அதிகம் பிரவேசிப்பதற்கு தூண்டுதல் அளிப்பற்கான ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது” என்கிறார் அவருடைய தாய் மாமனார்.

இறுதியாக, கமலா ஹரிஸ் வெற்றிபெற்றால் அமெரிக்க இந்திய பரஸ்பர உறவுகள் எவ்வாறு அமையும் என்பது பற்றி கூறுகையில்ரூபவ் “நான் கமலாவுடன் உரையாடுவதுரூபவ் அல்லது அவர் பற்றி எழுதுவது கமலாவை என் மூலமாக இந்தியா கையாள்கின்றது என்ற தவறான அர்த்தப்படுத்தலை ஏற்படுத்துவதற்கு வழிசமைத்து விடக்கூடாது என்பதில் அவதானமாக இருக்கின்றேன். இதனால் கமலாவுடன் உரையாடுவதிலேயே சற்று கால இடைவெளி ஏற்பட்டு விட்டது” என்று கூறும் அவருடைய தாய் மமனாரான பாலச்சந்திரன்ரூபவ் “தற்போதைய ஜனாதிபதி ட்ரம்போ, அல்லது கமலா பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக கட்சியலிருந்து ஜே பிடனோ ஆட்சிக்கு வந்தாலும் இந்திய, அமெரிக்க உறவில் கொள்கை ரீதியான மாற்றங்கள் இடம்பெறப்போவதில்லை. ஆனால் அணுகுமுறை ரீதியாக சிறு மாற்றங்களை மட்டுமே காணலாம்” என்று குறிப்பிட்டார்.

“கமலா வேட்பாளராக நிறுத்தப்பட்டதே பெருமகிழ்ச்சி அளிக்கையில் அவர் வெற்றி பெற்றால் இரட்டிப்பு மகிழ்ச்சியே” என்று தனது அலாதியான எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தியதோடு தொலைபேசி உரையாடலை நிறைவு செய்துகொண்டார் கமலா ஹரிஸின் தாய் மாமனரான 80 வயதுடைய கோபாலன் பாலச்சந்திரன்.