யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகள் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 24 ஆயிரத்து 327 பேர் படுகாயமடைந்துள்ளதோடு 497 பேர் மரணமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாகனப் போக்குவரத்து , விதிமுறை மீறிய பயணம்  உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் 2010 முதல் 2019ஆம் ஆண்டு வரையில் 24 ஆயிரத்து 327 பேர் படுகாயமடைந்துள்ளதோடு 497 பேர் மரணமடைந்துள்ளதாக மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.

இதேநேரம் இதற்கு முந்திய 9  ஆண்டுகளான 2001 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 9 ஆயிரத்து 556 பேர் படுகாயமடைந்ததோடு 163பேர் மரணமடைந்துள்ளனர்.

இதன் அடிப்படையில் முதல் 10 ஆண்டுகளினை விடவும் இரண்டாம் 10 ஆண்டில் காயமடைந்தோர் எண்ணிக்கை 250 விகிதத்தினை விட அதிகமாக அதிகரித்துள்ளதோடு மரணம் அடைவோர் தொகை 280 விகிதம் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.