(எம்.மனோசித்ரா)

தீ விபத்துக்குள்ளான எம்.டி. நியு டயமன் கப்பலின் கெப்டனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம்: குற்றப்புலனாய்வுத்  திணைக்களம் விசாரணை - Newsfirst

நேற்று சனிக்கிழமை இரவு பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலம் தொடர்பிலான விடயங்களை நாளைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் விசாரணைகளுக்கு தேவையான நீதிமன்ற அனுமதியை பெற்றுக் கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். கப்பலில் இருக்கும் எரிபொருளின் மாதிரியைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட 3  விடயங்களுக்காக சட்ட அனுமதி கிடைத்துள்ளது.

நாட்டிற்கு வருகை தந்துள்ள விசேட நிபுணர்கள் இருவர், விமானமூடாக தீப்பிடித்த கப்பலை கண்காணித்துள்ளனர். கப்பலில் இருந்து எரிபொருள் கசிந்து கடல் நீருடன் எண்ணெய் கலந்துள்ளமை குறித்து இதன்போது அவர்கள் கண்காணித்ததாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர குறிப்பிட்டுள்ளார்.