20 ஆவது திருத்தம் குறித்து ஆளும் கட்சிக்குள்ளேயே குழப்பம் - விமல்

Published By: Vishnu

13 Sep, 2020 | 04:45 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆளுந்தரப்பில் கூட சிலருக்கு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் அறிக்கை சமர்பிக்கப்பட்டவுடன் அதிலுள்ள விடயங்களை கவனத்தில் கொண்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைபிலுள்ள சில குறைபாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் மேலும் சில கட்சி தலைவர்களால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளோம்.

அதன் பின்னரே அவை குறித்து ஆராய குழுவொன்றை நியமிப்பதற்கு பிரதமர் தீர்மானித்தார்.

அந்த குழுவின் அறிக்கை கிடைக்கப் பெறும் வரை தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை பாராளுமன்றத்தில் சமர்பிக்காமல் இருப்பதற்கும், அந்த குழுவினால் பரிந்துரைக்கப்படுகின்ற விடயங்களையும் ஆராய்ந்து புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவித்தலே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55