நேற்றைய தினம் சனிக்கிழமையன்று (12.09.2020) விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும் பிரதமரின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையானார்.

கடந்த ஆண்டு செம்டெம்பர் 12 ஆம் திகதி, லிமினியை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கரம் பிடித்திருந்த நிலையில், ஒருவருட திருமண பூர்த்தியை நேற்று கொண்டிய நிலையில், அவர் ஆண் குழந்தையொன்றுக்கும் தந்தையாகியுள்ளமை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 


பிரதமரும், அவரது பாரியாரும், தங்களது பேரக்குழந்தையை மகிழ்ச்சியுடன் தூக்கிக் கொஞ்சும் புகைப்படங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளன.