ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு எதிராக கிரிக்கெட்டின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியமைக்காக ஐந்து குற்றச்சாட்டுகள் ஐ.சி.சி.யினால் சுமத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர்களான அமீர் ஹயாத் மற்றும் அஷ்பக் அஹமட் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஐ.சி.சி ஆண்கள் இருபதுக்கு-20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் எமிரேட்ஸ் கிரிக்கெட் நிறுவனம் (ஈ.சி.பி) அஷ்பக்கை இடைநீக்கம் செய்தது.

எனினும் அவருக்கு எதிராக இதுவரை முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை.

இந் நிலையில் தற்போது அமீர் மற்றும் அஷ்பக் மீது ஐ.சி.சி ஊழல் தடுப்புக் குறியீட்டை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.