இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவராகவே அமையவேண்டும் எனவும், அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரை நியமிப்பதே பொருத்தமானதாக அமையும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் ,தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிர்வாக கட்டமைப்பை முன்னெடுக்க 13 ஆவது திருத்த சட்ட மூலம் தேவை - சி .வி.கே.சிவஞானம் | Virakesari.lk

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கி.துரைராஜசிங்கம் தனது பதவியை இராஜினமா செய்துள்ளதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சி.வி.கே.சிவஜானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் சி.வி.கே.சிவஜானம்  மேலும் தெரிவிக்கையில்.

தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருந்து துரைராஜாசிங்கம் அண்மையில் தனது பதவியில் இருந்து விலகுவதாக கட்சிக்கு எழுத்துமூலமாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் பல கருத்துக்கள் பரப்பப்பட்டு  வருகின்றன,எனினும் யாரை நியமிப்பது என கட்சி கூடி தீர்மானிக்கும்.

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்கனவே இருந்தவர் மட்டக்களப்பு  மாவட்டத்தை பிரநிதித்துவம் செய்தே இருந்தவர், எனவே புதிதாக நியமிக்கப்படும் பொதுச்  செயலாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவம் செய்பவராக இருப்பதே  பொருத்தமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.