இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை தபால் திணைக்களத்துடன் இணைந்து மின்னணுக் கழிவுகளை தபால் நிலையங்களினூடாக சேகரிக்கும் சிறப்பு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஒக்டோபர் 09 ஆம் திகதி வரும் சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களத்தினால் சமூக பொறுப்புணவர்வு திட்டமாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி தொலைபேசி, கணினி, தொலைக்காட்சி, ரேடியோக்கள் போன்ற மின்னணுக் கழிவுகளை மக்கள் அந்தந்த தபால் நிலையங்களிடம் ஒக்டோபர் 5 - 10 வரையான காலப் பகுதியில் ஒப்படைக்கலாம்.
போதுமான இடவசதி இல்லாத பல தபால் நிலையங்களை கருத்திற் கொண்டு, சேகரிக்கப்படும் மின்னணுக் கழிவுகளை பிரதேச செயலக அலுவலகங்களுக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட மின் கழிவுகளை மறு சுழற்சி செய்வதற்கும், மறு சுழற்சி செய்ய முடியாத கழிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM