இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான ‘எம்டி நியூ டயமண்ட்’ எண்ணெய் கப்பலின் கேப்டனிடம் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

கப்பலின் கேப்டன் மற்றும் குழுவினர் தற்போது காலியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ளனர்.

சி.ஐ.டி. அதிகாரிகள் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் நேற்றைய தினம் இந்த அறிக்கையை பதிவுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கப்பலின் கேப்டன்களிடமிருந்து பதிவு செய்யப்பட்ட அறிக்கை தொடர்பான விடயங்கள் நாளை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நியூ டயமண்ட் கப்பலானது தற்போது சங்கமன்கண்டியிலிருந்து 45 கடல் மைல் தாலைவில் உள்ளது.