மஸ்கெலியாவில் மாணிக்கக்கல் அகழ்வுக்காக சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

By T Yuwaraj

13 Sep, 2020 | 11:54 AM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் மாணிக்கக்கல் அகழ முயன்றச் சென்ற நபர் மண்மேடு சரிந்துவிழுந்து உயிழந்ததாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் ரைட்அக்கரை தோட்டத்தைச் சேர்ந்து 26 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான  சுப்பிரமணியம் அமிலசந்திரன் என்ற இளம்குடும்பஸ்தர் நேற்று  12ஆம் திகதியன்று இரவு சுமார் 9 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மாணிக்கக்கல் அகழ்வதற்காக வெட்டிய குழியில் மண் திட்டு சரிந்ததில் மரணித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right