மலையக மக்கள் சகல உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும்: பாராளுமன்றத்தில் அதாவுல்லா...

Published By: J.G.Stephan

13 Sep, 2020 | 12:11 PM
image

சம்பளப் பிரச்சினை மட்டுமன்றி மலையக மக்களின் சகல உரிமைகளும் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டுமென்றும் அனைத்து சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும் போதுதான் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். எல்லா சிறுபான்மை தலைவர்களும் காலத்துக்கு காலம் பேச்சு வார்த்தை மட்டும் நடத்திவிட்டு சென்றுவிடுகிறார்களே தவிர பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. நாம் அனைவரும் ஒரு புள்ளியில் இருந்து அதை தீர்த்து வைக்க வேண்டுமென தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் அனுதாப பிரேரணையில் உரையாற்றும் போதே தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்;

சிறுபான்மை மக்கள் என்ற வகையில் மலையக மக்களுடன் நாம் எப்போதும் துணையாக இருப்போம். அமரர்களான முன்னாள் அமைச்சர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் வழியில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் எப்போதும் நாம் இணைந்து செயற்படுவோம்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் நான் இறுதியாக கலந்துரையாடிய போது நாங்கள் இருவரும் நாடு தொடர்பிலும் சிறுபான்மை மக்கள் தொடர்பிலும் அதிகநேரம் கலந்துரையாடினோம். இவ்வளவு சீக்கிரம் அவர் எம்மை விட்டு பிரிந்து விடுவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. அந்த வகையில் நல்ல நண்பனை நல்ல சகோதரனை சிறந்ததொரு தலைவனை நாம் இழந்திருக்கின்றோம். அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் பல கூட்டங்களிலும் வெளிநாட்டுப் பயணங்களிலும் நாம் சந்தித்து பல்வேறு விடயங்களை கலந்துரையாடியதை நான் நினைத்துப் பார்க்கின்றேன். இப்போதும் அதை மறக்க முடியாதுள்ளது. தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடிய தலைவர் அவர் எனவும் தெரிவித்துள்ளார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06