'இழுவைப்படகு மீன்பிடி முறையை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது'

Published By: Raam

14 Jul, 2016 | 08:11 PM
image

(ரி.விரூஷன்)

கடற்பரப்பில் இழுவை படகுகள் மூலமான மீன்பிடித் தொழில் முறையை இந்திய அரசாங்கம்  ஏற்றுக்கொள்ளாது. அத்தகையதொரு நிலைப்பாட்டில்தான் இந்திய   மத்தியரசாங்கம் உள்ளது என யாழ். இந்திய துனைத்தூதுவர் ஆர்.நட்ராஜன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை , இந்திய மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பில்   பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுமாயின் அது வெற்றியளிப்பதாகவே அமையும் என அவர் உறுதிபடத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இரு நாட்டு மீனவர்களது பிரச்சனை தொடர்பாக யாழ். இந்திய துணைத்தூவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார். இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இலங்கை மீனவர்களில் குறிப்பாக வடக்கு மீனவர்களும் இந்திய மீனவர்களும் உறவுக்காரர்கள் போன்றவர்கள். அவர்களுக்கிடையில் தொப்புள்கொடி உறவு இருக்கின்றது. அந்தவகையில் எமது நோக்கானது இவ் இரு மீனவர்களுக்குமிடையில் எந்தவொரு பிரச்சனையும் இருக்கக் கூடாது என்பதேயாகும்.

இந்திய மீனவர்கள் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிப்பது தொடர்பில் குற்றச்சாட்டு எழுகின்றன.  இந்த விடயத்தை பொறுத்தவரையில் இழுவைப்  படகுகள் மூலமான மீன்பிடி தொழில்முறையை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. அதனை யார் கைக்கொண்டாலும் அதனை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இத்தகையதொரு நிலைப்பாட்டில் தான் இந்திய மத்திய அரசாங்கமும் உள்ளது. எனவே இழுவை படகு தொழில்முறையை முற்றாக தடைசெய்ய வேண்டும்.

மேலும் போருக்கு பிற்பட்ட காலத்தை பொறுத்தளவில் வடக்கில் தற்போது தான் சுமூகமான நிலைமை ஏற்பட்டு வடக்கு மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் அவர்களது வாழ்வாதாரத்தை பற்றியும் சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. எனவே இவர்களது பிரச்சனை தொடர்பில் விரைவாக ஒர் தீர்வினை எட்டப்பட வேண்டியுள்ளது.

இதன்படி இருதரப்பு மீனவர்களையும் பேச்சுவார்த்தையொன்றுக்கு அழைத்து அதனூடாக மனிதாபிமான அடிப்படையில் எந்தவொரு தரப்பிற்கும் அது வடக்கு மீனவர்களாக இருந்தாலும் சரி தமிழக மீனவர்களாக இருந்தாலும் சரி பாதிப்புக்களோ இழப்புக்களோ ஏற்பாடத வகையில் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்திய அரசாங்கமானது ஆழ்கடல் மீன்பிடியை அறிமுகப்படுத்தி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நூழைய முடியாதவகையில் மாற்று தொழில்முறைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55