கட்டிட நிர்மாண பணிகளில் ஈடுபடும் நபர்களை இழக்காக கொண்டு மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடடிவக்ககைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதில் 48 பேர் போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.