கொரோனா தொற்று சந்தேகத்தில் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து  தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 13 பேர் இன்று தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர்.

அதேவேளை நாட்டில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தமது தனிமைப்படுத்தல் நடைமுறையை முழுமையாக பூர்த்தி செய்த 40,659 பேர் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 56 தனிமைப்படுத்தும் நிலையங்களில் மேலும் 5,816 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் முப்படையினர் தெரிவித்துள்ளனர்.