கொரோனா காரணமாக மத்தியக்கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்த 405 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய கட்டார் , ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணி புரிந்து வந்த 405 இலங்கையர்களே இன்று காலை விசேட விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் அவர்ளுக்கான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.