நீர்கொழும்பு, கொச்சிகடை பகுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வின்போது 30 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இவர்களிடமிருந்து கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.