இந்தியாவில் பிரபல தொழிலதிபரொருவர், தனது மனைவியின் நினைவாக தத்ரூப சிலையொன்றை வடித்துள்ளார்.

மதுரை மேலப்பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் சேதுராமன். பிரபல தொழிலதிபரான இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஒகஸ்ட் 8 ஆம் திகதி இயற்கை எய்தினார். தனது மனைவி பிரிந்து சென்றதை, தாங்க முடியாமல், தனியாக தவித்து வந்துள்ளார் தொழிலதிபர் சேதுராமன். எனவே மனைவியின் நினைவு எப்போது தனக்குள் இருக்க வேண்டும் என்று உணர்ந்த அவர், பிச்சைமணி அம்மாளுக்கு சிலை ஒன்றை வடிவமைக்க வேண்டும் என எண்ணினார்.

இதற்காக மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பியான பிரசன்னா மற்றும் ஓவியர் மதுரை மருது ஆகியோரைக் கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன்  என்றும் நிரந்தரமாக  இருக்கும் வகையில் 6 அடியில் பிச்சைமணி அம்மாளின் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்தனர்.

தத்ரூபமான தனது மனைவி சிலையை பார்த்து தொழிலதிபர் பிச்சைமணி பிரமித்து போனார். பிச்சைமணி அம்மாள் இறந்து 30 ஆம் நாளையொட்டி, பாசமிகு மனைவியின் சிலையை வைத்து அவர் வழிபாடு செய்தார். 

இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரிதும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.