கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல்  நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு 10, 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் இன்று  இரவு 10 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

கொழும்பு பெருநகர் நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு திட்டத்தின் விநியோக முறைமையின் அத்தியாவசிய சேவை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் அம்பத்தலேயிலிருந்து எலிஹவுஸ் வரையான பிரதான நீர் விநியோகக் கட்டமைப்பின் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.