உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்: தடை செய்ய கோரப்பட்டுள்ள ஆறு முஸ்லிம் அமைப்புக்கள் குறித்த தகவல்

Published By: J.G.Stephan

12 Sep, 2020 | 04:31 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினமான 2019.04.21 அன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை அடுத்து, 6 முஸ்லிம்  அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்ய, இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய உளவுச் சேவையிலிருந்து பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றதாகவும் அதில் மூன்று அமைப்புக்கள் தடை செய்யப்பட்டதாகவும் முன்னாள் தேசிய உளவுத்துறை பிரதானி சிசிர மெண்டிஸ் தெரிவித்தார். அத்துடன் ஏனைய 3 முஸ்லிம் அமைப்புக்களும் குண்டுத் தாக்குதலுடன் நேரடியாக எந்த தொடர்புகளையும் கொண்டிராத நிலையில் அவற்றை தீவிர கண்கானிப்பின் கீழ் வைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்று வருகின்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

 இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி திங்கள் முதல், தேசிய உளவுத்துறை முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ், ஆணைக் குழுவில் சாட்சியமளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் 5 ஆவது நாளாக சாட்சியமளித்த அவரிடம் ஆணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, சிசிர மெண்டிஸ் மேற்படி விடயங்களை வெளிப்படுத்தினார்.  5 ஆவது நாள் சாட்சிப் பதிவின் போது விஷேடமாக முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் தொடர்பில் சிசிர மெண்டிஸிடம், அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவும் ஆணைக் குழுவின் உறுப்பினர்களும் கேள்வி எழுப்பினர்.

 இந்நிலையில் அவற்று பதிலளித்தவாரு சிசிர மெண்டிஸ்,

' 21/4 தாக்குதல்களின் பின்னர் அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புக்களை தடைச் செய்வது குறித்து நடவடிக்கைஎ டுக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களே அதற்கு காரணமாகின. அதற்கான நடவடிக்கைகளை நானே எடுத்தேன். இதன்போது இராணுவ புலயாய்வு பிரிவு 3 அடிப்படைவாத அமைப்புக்களையும் தேசிய உளவுச் சேவை 3 அடிப்படைவாத அமைப்புக்களையும் பெயரிட்டு அனுப்பின.

அதன்படியே கடந்த 2019 மே 7 ஆம் திகதி அப்போதைய பாதுகாப்பு செயலர் ஜெனரால் சாந்த கோடேகொட, தேசிய தெளஹீத் ஜமா அத், ஜமாத்தே மில்லத்தே இப்ராஹீம் மற்றும் விலாயத் அஷ் ஷெய்லானி ஆகிய அமைப்புக்களை தடை செய்ய அப்போதைய ஜனாதிபதி செயலர் உதய ஆர். செனவிரத்னவுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.' என சாட்சியமளித்தார்.

 இதன்போது இது தொடர்பிலான ஆவணங்களை பரிசீலித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு,  இராணுவ புலனாய்வுப் பிரிவு பரிந்துரை செய்த மேலும் மூன்று அமைப்புக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் தேசிய உளவுத்துறை பிரதானி சிசிர மெண்டிஸிடம் கேள்வி எழுப்பியது.

ஏ.சி.டி.ஜே. எனும் அகில இலங்கை தெளஹீத் ஜமா அத்,  எஸ். எல்.ரி.ஜே. எனும் ஸ்ரீ லங்கா தெளஹீத் ஜமா அத், சி.டீ.ஜே. எனப்படும் சிலோன் தெளஹீத் ஜமா அத் ஆகிய அமைப்புக்களையும் தடை செய்ய உளவுத் துறையொன்றூடாக தகவல் அளிக்கப்பட்டும் ஏன் அவை தடைச் செய்யப்படவில்லை என ஆணைக் குழு உறுப்பினர்கள் வினவினர்.

 அதற்கு பதிலளித்த தேசிய உளவுத் துறை முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ், அவ்வமைப்புக்கள் தொடர்பில் தேசிய உளவுச் சேவை பிரதானியிடம் மீள ஆய்வு செய்து அறிக்கை கோரிய போது, அவ்வமைப்புக்கள் தாக்குதலுடன் எவ்வித  நேரடி தொடர்புகளையும் கொண்டிருக்காமை  உள்ளிட்டவற்றை  அடிப்படையாகக் கொண்டு  தடை செய்யப்படுவதற்கான பரிந்துரையில் உள்ளடக்கப்படவில்லை , எனினும் அம்மூன்று அமைப்புக்களையும் தீவிர கண்காணிப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58