கல்முனை சாய்ந்தமருதில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஐவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட சாய்ந்தமருதில் ரெட்சிலிக்கு அருகாமையில் நேற்றிரவு இரு மோட்டார் சைக்கில் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் நால்வர் ஆபத்தான நிலையில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதில் கல்முனையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மற்றொருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன.
இதே சமயம் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்னால் முச்சக்கர வண்டி ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயங்களுடன் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன.
இரு சம்பவங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM