இன்று சர்வதேச முதலுதவி தினம்!

12 Sep, 2020 | 04:05 PM
image

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாம் சனிக்கிழமை,‘சர்வதேச முதலுதவி தின’மாக கொண்டாடப்படுகிறது.

முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபருக்கு அளிக்கப்படும்.

விபத்துகளால் இறப்பவர்களில் 80 சதவீதத்தினருக்கு, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான முதல் உதவி கிடைக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அவர்களுக்கு உரிய முறையில் முதலுதவி கிடைத்திருந்தால், உயிர் பிழைத்திருப்பர். முதலுதவி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தால்,செப்டம்பர் மாத இரண்டாவது சனிக்கிழமையைன்று (செப்., 12) சர்வதேச முதலுதவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஒருவர் ஆரோக்கியப் பாதிப்புக்குள்ளானால் தயங்காமல் முதலுதவி செய்ய முன்வர வேண்டும். முதலில் பாதிப்படைந்தவர், உணர்வுடன் இருக்கிறாரா? (ரத்த ஓட்டம், சுவாசப் பாதையில் அடைப்பு, சுவாசம் உள்ளதா) என்பதை சோதிக்க வேண்டும். எவ்வகை பாதிப்பானாலும் இந்த மூன்றும் அவசியம்.

ஒருவர் மயக்கமடைந்துவிட்டால், அவரை சூழ்ந்து நிற்கக்கூடாது. காற்றோட்டத்துக்கு வழி செய்ய வேண்டும். பிறகு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அம்புலன்ஸை வரவழைப்பதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளவேண்டும். அத்துடன் அம்புலன்ஸ் வந்தடையும் கால அவகாசத்தை அவதானித்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவியைத் தொடர வேண்டும். 

முதலுதவி செய்வோம். உயிர் காப்போம்.

வலிப்பின் போது முதலுதவி

மயக்கத்தின் போது முதலுதவி

அவசர காலத்தில் உதவும் முதலுதவி டிப்ஸ் - Lankasri News

வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி

First Aid Bandaging | Articles | Mount Nittany Health System

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருதிநெல்லியின் மருத்துவ குணங்கள்

2022-11-27 12:03:46
news-image

வேதிப்பொருட்களால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்

2022-11-25 13:17:56
news-image

ரைனிட்டிஸ் மெடிகமென்டோசா எனும் மூக்கடைப்பு பாதிப்பிற்கான...

2022-11-25 10:44:45
news-image

குழந்தை வயிற்று வலியால் அழுகிறதா?

2022-11-24 17:29:31
news-image

மலச்சிக்கலா ? அலட்சியம் காட்டினால் மூலநோய்...

2022-11-24 12:39:37
news-image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேனில்...

2022-11-24 12:23:13
news-image

குழந்தையை கறுப்பாக்குமா இரும்புச் சத்து ?

2022-11-24 11:44:18
news-image

குழந்தைகளின் இதயம்

2022-11-23 16:05:33
news-image

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படக் காரணம்...

2022-11-23 12:12:37
news-image

உடல்நிலை சீராக இல்லாத நேரத்தில் உடற்பயிற்சி...

2022-11-23 12:24:33
news-image

ப்ளூரெடீக் பெய்ன் என்றால் என்ன ?

2022-11-23 11:10:06
news-image

தாமதமடையும் குழந்தைப்பாக்கியம் – காரணம் என்ன..?

2022-11-22 17:20:12