அம்பலங்கொட- எல்பிட்டியா பிரதான வீதியில் கரந்தெனிய, கிரிபெந்த சந்திக்கு அருகே ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்றுள்ள குறித்த  விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

லொரி ஒன்றை  முந்திச் செல்ல முயற்சித்த  கார் ஒன்று குறித்த வீதியின் வளைவுப்பகுதியில் வைத்து எதிர் திசையில் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

கார் சாரதியின் அசமந்த போக்கு காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.