யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் உடைமையில் வைத்திருந்த பெண்ணொருவர் இளவாலைப் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுழிபுரம் மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் போதைப் பொருள் இருப்பதாக இளவாலை பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இளவாலைப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது குறித்த வீட்டில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு 36 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 2 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.