வவுனியா நகரிலிருந்து மாமடு  நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவர்களை மடுகந்தை பொலிஸார் இன்று  (12) அதிகாலை 1.30மணியளவில் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மடுகந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  வவுனியா - மாமடு செல்லும் சந்தியில்  அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைசாவடியில் மாமடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை இன்று அதிகாலை வழிமறித்து  பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

இதன் போது அவர்களிடமிருந்து  2கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் 3கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் என்பவற்றை பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 36 வயதுடைய பூந்தோட்டம், றம்பைக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என  பொலிஸார் தெரிவித்தனர்.

கைபற்றப்பட்டுள்ள போதைபொருட்கள் மற்றும் கைதானவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.