கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளை அடுத்து இன்று காலை நாட்டிற்கு 59 இலங்கையர்கள் வந்தடைந்தனர்.

 

கட்டார் , டோஹாவில் சிக்கித் தவித்த 54 இலங்கையர்களே இன்று காலை விசேட விமானமொன்றில் நாட்டிற்கு வந்தடைந்தனர்.

அத்தோடு 4 பேர் டுபாயிலிருந்தும் , அபுதாபியில் இருந்து ஒருவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாட்டிற்கு வந்தடைந்த 59 பேருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்று நோய் பரவலை கண்டறிவதற்கு 1,890 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா நோய்த் தொற்றை கண்டறிவதற்கு சுமார்  249,328 பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.