நாட்டில் நேற்றையதினம் (11) மேலும் 07  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய 05 பேருக்கும், சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய 02 பேருக்குமே நேற்றையதினம் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் இன்றையதினம் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய  7 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது வரையில் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,169 ஆக அதிகரித்துள்ளதோடு, 2,969  பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்தோடு தற்போது 181 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 39 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.