மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலையில் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். 

வாழைச்சேனை செம்மன் ஓடை 4 ஆம் பிரிவு ஹிஸ்புல்லா வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய யாவாத் முகமட் றிஸ்வி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் சம்பவதினமான இன்று வெள்ளிக்கிழமை (11) அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா கல்மலை கடல் பகுதியில்  கடலில் நீராடச் சென்று நீராடிய நிலையில் கடல் கல்மலையில் சிக்கி நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில்   ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.