சுமார் 3000 பேரின் உயிரைக் காவு கொண்ட அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 19 வருடங்கள் ஆகின்றன.
கடந்த 2001 செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அன்று, நியூயோர்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தின் புகழ்பெற்ற இரட்டை கோபுரங்களை ஊடறுத்து இரண்டு விமானங்கள் தாக்குதலை மேற்கொண்டன.
இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான அல்-கொய்தாவுடன் தொடர்புடைய 19 பயங்கரவாதிகள் நான்கு விமானங்களை கடத்தி, அமெரிக்காவில் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
மூன்றாவது விமானம் வொஷிங்டன் கொலம்பியா மாநிலத்திற்கு வெளியே பென்டகனைத் தாக்கியது, நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் ஒரு வயல் வெளியில் வீழ்ந்து வெடித்தது.
9/11 பயங்கரவாத தாக்குதலின் போது சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
9/11 தாக்குதல் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அமெரிக்காவின் முக்கிய முயற்சிகளைத் தூண்டியது.
19 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில், அமெரிக்கன் ஏயார்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 767 விமானம் 20,000 கலன் ஜெட் எரிபொருளுடன் உலக வர்த்தக மையக் கோபுரத்தின் வடக்கே மோதியது.
இதனால் 110 மாடிக் கட்டிடத்தின் 80 ஆவது மாடி தீப் பிடித்து எரிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் உயர்ந்த மாடிகளில் சிக்கிக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து 18 நிமிடங்களுக்குப் பிறகு, அமெரிக்கன் ஏயார்லைன்ஸுக்கு சொந்தமான இரண்டாவது போயிங் 767-விமானம் தெற்கு கோபுரத்தில் மோதியது. இதனால் குறித்த பகுதி துளைக்கப்பட்டது.
9/11 தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடனின் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு நிதியளித்ததாக கூறப்படுகிறது.
2001 செப்டம்பர் 11 தாக்குதலானது பாதுகாப்பு கண்ணோட்டத்தில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்தது.இதில் சிவில் உரிமைகளின் இழப்பில் புதிய கடுமையான சட்டங்களை உருவாக்குவது அடங்கும், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் பாக்கிஸ்தானில் இராணுவ நடவடிக்கைகள் சர்வாதிகாரிகள் சதாம் ஹுசைன் மற்றும் முயம்மர் கடாபி ஆகியோரின் மரணங்களுக்கு காரணமாக இருந்தன.
2001 செப்டம்பர் 11 தாக்குதல் காரணமாக நியூயோர்க் நகரம், வொஷிங்டன், டி.சி மற்றும் பென்சில்வேனியா ஆகிய பகுதியில் மொத்தம் 2,977 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM