(செய்திப்பிரிவு)

மத்தேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தீபங்கொட பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.  

குறித்த நபர் நேற்று  வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் குளிப்பதற்காக சென்றிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

தீபங்கொட - ஹோமாகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.