வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்னவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

Published By: Priyatharshan

14 Jul, 2016 | 05:16 PM
image

ஆனமடு கிவுல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார் எனத்தெரிவித்து வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்னவுக்கு எதிராக ஆனமடு தொகுதி ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் மாகாண சபைகள், உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவராவார். 

இந்நிலையில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை பகல் ஆனமடு கிவுல பிரதேசத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரை ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்ததோடு இந்நிகழ்வுகள் தொடர்பில் ஆனமடு பிரதேசங்களில் பல இடங்களிலும் பதாதைகள் மற்றும் போஸ்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதைகள் மற்றும் போஸ்டர்களை சிலர் கிழித்து சேதப்படுத்தியிருந்ததோடு அதனை ஆனமடு தொகுதி பிரதான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான பிரியங்கர ஜயரட்வின் ஆதரவாளர்களே செய்தனர் எனக் குறித்த மாகாண சபை உறுப்பினர் அங்கு இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறி தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தான் அவ்வாறு செய்யவில்லை எனவும் இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்த முறைப்பாட்டைச் செய்ததாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தான் ஒருபோதும் இவ்வாறான போஸ்டர்களைக் கிழித்து, கட்வுட்களை சேதப்படுத்தும் கீழ்த்தரமான வேலைகளைச் செயததில்லை எனவும், மஹிந்த ராஜபக்ஷ என்பவர் இந்நாட்டிற்கு சமாதானத்தை ஏற்படுத்திய ஒரு தலைவராகையால் அவருக்கு அகௌரவம் ஏற்படுத்தும் நோக்கம் தனக்கு ஒரு போதும் இருந்ததில்லை எனவும், மாகாண சபை உறுப்பினரின் இந்த உரை தொடர்பில் தான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் இது தொடர்பில் வினவியபோது இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52