(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கரங்களை தொடர்ந்தும் பலப்படுத்தி அரசாங்கத்திற்கு துணையாக இருப்போமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பான நிதி, பொருளாதார, கொள்கை அபிவிருத்தி கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
கடந்த பொதுத் தேர்தல் மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனது கைவிலங்கிடப்பட்டு, எனது குரல் வலை நசுக்கப்பட்டு சிறையில் 5 வருடங்கள் இருந்தேன். நான் வேட்புமனுத்தாக்கல் செய்தபோது புலம்பெயர்ந்த பலர் எனக்கு எதிராகப் பிரச்சாரங்களை செய்தார்கள். ஆனால் அதனை நாம் முறியடித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தனிப் பெரும் கட்சியாக பொதுத்தேர்லில் வெற்றிபெற்றுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கடந்த காலங்களில் ஆயுத மேந்தியிருந்தாலும், 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாம் ஜனநாயக இயக்கமாக மாறியிருக்கிறோம். மக்களின் வாக்குகளுக்காக போலி தமிழ்த் தேசியம் பேசிபவர்கள் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. எனவே சாத்தியமான விடயங்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். 2007ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதன் பின்னர், கிழக்கு மாகாணத்தில் சிதைந்து போயிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தலில் நாம் போட்டியிட்டு, கிழக்கு மாகாணத்தின் முலமைச்சராக நான் தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.
2017ஆம் ஆண்டு வரையில் நான் மாகாணசபை உறுப்பினராக இருந்தேன். மைத்திரி - ரணில் - சம்பந்தன் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் நாட்டில் பல மோசமான சம்பவங்களை செய்திருந்தது. நாம் வாக்களிக்க செல்ல முடியாது துரத்தியடிக்கப்பட்டோம். தற்போது நான் பயங்கரவதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தைப் போன்றதொரு, தேர்தல் விஞ்ஞாபனத்தை நாமும் முன்வைத்திருந்தோம். தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்தி, அரசாங்கத்துக்குத் துணையாக இருப்போம்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM