இருபதாவது சீர்திருத்தம், பிரேமலால் குறித்த தவறான எண்ணங்களுக்கு ஜனாதிபதி பதில்

Published By: Digital Desk 4

11 Sep, 2020 | 11:33 AM
image

இருபதாவது அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பற்றி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு எதிர்கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்கள் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்ற கருத்துக்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (10) பதிலளித்தார்.

இராஜாங்க அமைச்சர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் எதிர்கட்சியின் குற்றச்சாட்டு பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியலமைப்பின் 20வது சீர்திருத்தத்தின் நோக்கம் 19வது திருத்தம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளை களைந்து முன்னோக்கி செல்வதாகும் என்று குறிப்பிட்டார்.

”அனைத்தையும் ஒரே தடவையில் மாற்ற முடியாது. அதற்கு நீண்டகாலம் எடுக்கும். பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 19வது சீர்திருத்தத்தின் சில விடயங்களை அவ்வாறே வைத்துக்கொள்ள வேண்டும். முதன்மையான நோக்கம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மாற்றாது எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகும்.” என்று  தெளிவுபடுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பற்றி எதிர்கட்சி முன்வைக்கின்ற குற்றச்சாட்டு பற்றி அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி தாமோ அல்லது பிரதமரோ நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வித தலையீட்டையும் செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.

”தலையீடு செய்வதாயின் உயர் நீதிமன்றத்திலேயே செய்ய வேண்டி இருந்தது. அவ்வாரானதொரு விடயம் எச்சந்தர்ப்பத்திலும் இடம்பெறவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியை அரசியலமைப்பு பேரவையே நியமித்தது. கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச, தலதா அதுகோரல உள்ளிட்ட சிலரே அதில் இருந்தனர்.  எதிர்கட்சிக்கு ஒரு தீர்ப்பு நல்லது மற்றையது கெட்டது” என்று விபரித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியை நியமித்ததும் அந்த அரசியலமைப்பு பேரவையே என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி எதிர்கட்சி பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13
news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை -...

2025-03-21 23:48:50
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59