குருமன்காடு பகுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக இன்று இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.  

வவுனியா நகரசபையின் உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாரதியாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  

அதனைத் தொடர்ந்து அவரது தமிழ் பற்று மற்றும் சுதந்திர வேட்கை தொடர்பான கருத்துரைகளை மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.சிறினிவாசன்,  ஆற்றியிருந்தார்.   

நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராசா, க.சந்திரகுலசிங்கம், ரி.கே.ராஜலிங்கம், க.சுமந்திரன், பி.ஜானுஜன், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர். சந்திரகுமார் , வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன் , வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , சமூக ஆர்வலர்கள் , வர்த்தகர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்