பெய்ரூட் துறைமுகத்தில் இன்று வியாழக்கிழமை ஒரு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 190 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 6,500 பேர் காயமடைந்தனர் மற்றும் லெபனான் தலைநகரில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களை சேதங்களுக்குள்ளாகியது.

இந் நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் அப் பகுதியில் மீண்டும் பரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளமையினால் குடியிருப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த தீ விபத்து என்ன என்பது குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் பெரும் கருப்பு புகை மண்டலங்கள் வானை எட்டியுள்ளன.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக துறைமுகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் ஆகஸ்ட் 4 அன்று வெடித்ததில் சுமார் 191 பேர் கொல்லப்பட்டனர்.