கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் முகமாக இங்கிலாந்தில் செப்டம்பர் 14 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் புதிய சட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட உள்ளன.
இதற்கமைய இங்கிலாந்தில் திங்கள்கிழமை முதல் ஆறுக்கும் மேற்பட்ட நபர்களின் ஒன்றுகூடல்கள் மற்றும் பொது கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
ஆனால் பாடசாலைகள், பணியிடங்கள் மற்றும் கொரோனா பாதுகாப்பிற்கு அமைய நடத்தப்படும் திருமணங்கள், இறுதி சடங்குகள், ஒழுங்கமைக்கப்பட்ட குழு விளையாட்டுகளுக்கு விதி விலக்களிக்கப்பட்டுள்ளது.
இவ் புதிய விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் 100 பவுண்டு முதல் 3,200 பவுண்டு வரை அபராதம் விதிக்கப்பட உள்ளதுடன் குற்றத்திற்கு அமைய அபராதம் இரட்டிப்பாகும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.