மாங்குளம் - பனிக்கன்குளம் கனகராயன் ஆற்றுப்பகுதியில் இருந்து சட்டவிரோத மணல் கடத்தல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் உழவு இயந்திரங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பனிக்கன்குளம் பகுதியில் உள்ள கனகராயன் ஆற்று பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்றவர்களை நேற்று (09) இரவு மூன்று உழவு இயந்திரங்களுடன் மாங்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களுடன், மாங்குளம் பொலிஸார் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே மணல் கொண்டு சென்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் சில காலமாக சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாகவும், ஆற்றில் இருந்து மணல் அகழ்ந்ததாகவும், சட்டவிரோதமாக மணல் கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 19, 31, 33 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் மாங்குளத்தில் வசிப்பவர்கள் என்றும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM