மாவத்தகம பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது போதை மாத்திரைகளுடன்  சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது  1000 போதைமருந்து உருண்டைகள்  கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே  குறித்த போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கதுருவெல பகுதியைச் சேர்ந்த 29 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.