பிரபல தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
விஜய் தொலைக்காட்சியல் பிரபலமான இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனியார் வைத்தியசாலையில் மாரடைப்பினால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே அவருக்கான சிகிச்சைகளுக்கு போதிய பண வசதி இன்மையால் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
சிகிச்சைகள் பெற்று வந்த அவருக்கு கை, கால்களும் செயல் இழந்ததாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையிலையிலேயே அவர் அரச வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டிருந்த வேளையில் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான அவர் "அது இது எது ," கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை அதிகளவில் சிரிக்கவும் வைத்துள்ளார்.
அத்தோடு சமீப காலமாக அவருக்கு கிடைக்கப்பெற்ற படங்களில் சில கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார்.
இந்நிலையிலேயே அவரின் மறைவு சின்னத்திரையில் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM