உங்கள் குடும்பத்தில் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்றை வரவேற்பதென்பது வாழ்கையில் மிகவும் மகிழ்ச்சிக்குரியதொரு விடயமாகும். அனைத்துப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கான சிறந்தவற்றைத் தவிர வேறொன்றையும் வேண்டுவதில்லை. அதாவது புதிதாகப் பிறந்த குழந்தைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி அவர்களின் நீண்ட எதிர்காலத்திற்கு நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கியமான பொறுப்பையே அவர்கள் கொண்டிருக்கின்றனர்.

மக்களுக்கு ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுடன், சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுவதில் அர்ப்பணிப்பு நிறைந்த ஓர் நிறுவனம் என்ற வகையில், AIA ஒரு பரந்த பொறுப்புணர்வுடன் பின்னிப்பிணைந்துள்ள இந்த மகத்தான மகிழ்ச்சி நிறைந்த தருணத்தைக் கௌரவிக்கின்றது. புதிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மற்றும் நிறைவான வாழ்க்கையைத் திட்டமிடும் போது அவர்கள் முகங்கொடுக்க வேண்டிய பல விடயங்களில் எங்களால் உதவ முடியாமல் இருப்பினும், அவர்களுக்கு நாங்கள் உதவக்கூடிய ஒரு விடயம் நிச்சயமாக இருக்கிறது. 

நாங்கள் ஆயுள் காப்புறுதி வியாபாரத்தில் இருப்பதனால், புதிய பெற்றோர்களுக்கு நிதியியல் ரீதியான பாதுகாப்புத் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களின் நிதியியல் பாதுகாப்பின் உறுதிப்பாட்டை தெரிவிப்பதன் மூலம் மன நிம்மதியினை அவர்களுக்கு வழங்க முடியும். 

இதற்காக, முற்றிலும் இலவசமான ரூபா. 1 மில்லியன் பெறுமதியான உலகளாவியத் தனிநபர் விபத்து ஆயுள் காப்புறுதிக் காப்பீட்டை வழங்குவதன் மூலம் பெற்றோர் ஸ்தானத்திற்குக் காலடி எடுத்து வைக்கும் குடும்பங்களுக்கான இடர்காப்பு மற்றும் நிதியியல் பாதுகாப்பை வழங்குவதற்காக AIA நைன்வெல்ஸ் வைத்தியசாலையுடன் கூட்டாண்மை ஒன்றினை ஏற்படுத்தியிருக்கின்றது. 

படத்தில்: AIA  இன் பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி மற்றும் நைன் வெல்ஸின் பிரதான செயற்பாட்டு அதிகாரி மற்றும் வைத்தியப் பணிப்பாளர் வைத்தியர் விபாஸ் விஜேரத்ன ஆகியோர் புதிய பெற்றோர் ஒருவருக்கு முதலாவது இலவச AIA ஆயுள் காப்பீட்டை நைன்வெல்ஸில் கையளிக்கின்றனர்.