(இராஜதுரை ஹஷான்)

இறைச்சிக்காக   மாடு அறுப்பதை தடுக்க  பிரதமரால் முன்வைக்கப்ட்ட யோசனை தொடர்பில் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும். 

 சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை  சட்டமாக்குவது ஒரு மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது  என    அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய  ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க  தகவல் திணைக்களத்தில்  இன்று  இடம்பெற்ற  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இறைச்சிக்காக  மாடு அறுக்கும்  செயற்பாட்டை தடுக்க  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை ஆளும்  கட்சி கூட்டத்தில்  தனி நபர் யோசனையை முன்வைத்தார்.   இவ்விடயம் தொடர்பில் தற்போது  அரசியல்  மற்றும்   சமூக தரப்பில் மாறுப்பட்ட  கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

  பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனை   தொடர்பில்  அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும்  அதனால் மாடு அறுப்பு தொடர்பான தடை  சட்டம்  கொண்டு வருவது ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

அரச ஊடக நிறுவனங்கள்  அரச வரவு  - செலவில்   சுமையற்ற   வகையில்  நடாத்திச் செல்லும் வகையில்  அரச மற்றும் நியதிச்சட்ட  நிறுவனங்களின் அறிவித்தல்கள்  மற்றும்   விளம்பர செலவுகளில் 25 சதவீதம் பெறுமதியான  விளம்பர நிகழ்ச்சிகள்   இலங்கை ரூபவாஹினி  கூட்டுத்தாபனம்,  இலங்கை ஒளிப்பரப்பு  கூட்டுத்தாபனம்,  இலங்கை  சுயாதீன   தொலைக்காட்சி  கூடக வலையமைப்பு மற்றும் வரையறுக்கபட்ட   பத்திரினை  நிறுவனங்கள்   உள்ளிட்ட அரச   ஊடக  நிறுவனங்கள்  ஊடாக  கட்டாய   விளம்பர நிகழ்ச்சிகளை    வழங்க  வெகுஜன ஊடாக   அமைச்சு    அமைச்சரவைக்கு     சமர்ப்பித்த   யோசனைக்கு  அங்கிகாரம்    கிடைக்கப் பெற்றுள்ளது.   என்றார்.