மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்ரஸ்பி தோட்ட அவரவத்தை பிரிவில் உள்ள சுமார் 120 ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர். இத்தொழிலாளர்கள் நேற்றும் இன்றும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இத்தொழிலாளர்கள் பணி புரிந்த நாட்களுக்கு வழங்கப்படும் முழுநேர வேதனத்தை குறைத்து பாதி வேதனம் வழங்கப்பட இருப்பதை தொடர்ந்து இப்போராட்டத்தை முன்னெடுத்ததாக போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் தொழிலாளர்களில் சிலர் நாட் சம்பளத்திற்கு 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்றால் அதற்கு மேலதிகமாக பரித்திருந்த போதிலும் மேலதிக கொழுந்திற்கு வேதனம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

அத்துடன் இப்போராட்டம் தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.இதன்போது உரிய வேதனம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.