கொழும்பு வௌ்ளவத்தை பகுதியில் மூன்று மாடி கட்டிட நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று 09.09.2020 புதன்கிழமை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 

தலவாக்கலை, கிறேட் வெஸ்டன் தோட்டத்தை சேர்ந்த தனபால் ஜீவா அபிலேஷ் குமார் வயது (17)  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த இளைஞன் தொழில் நிமித்தம் கொழும்பு வெள்ளவத்தை பகுதிக்குச் சென்ற நிலையில் அங்கு மூன்று மாடி கட்டிட நிர்மாண தளத்தில் வேலை செய்துக்கொண்டிருக்கும்போது நேற்று  ( 9.9.2020 ) புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

சடலம் தற்போது கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.